மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

 

மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

சமீப காலமாக தமிழகத்தில் ஓடைகளிலும் ஏரிகளிலும் ஆறுகளிலும் மணற்கொள்ளை அதிகமாக நடைபெற்று வருகிறது. வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியும் மணல் கிடைக்காமல் பல ஏழைகள் வீடு கட்ட இயலாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் மணலை கொள்ளை அடித்து அதிக விலைக்கு விற்கும் செயல் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை அமைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.