ஆவணங்களில் தாய் பெயரைக் குறிப்பிட கோரி வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு!

 

ஆவணங்களில் தாய் பெயரைக் குறிப்பிட கோரி வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு!

அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தாய் பெயரைக் குறிப்பிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்களில் தாய் பெயரைக் குறிப்பிட கோரி வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு!

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் தனிப்பிரிவை ஏற்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கி இருக்கும் நிலையில் பத்ம விருது விண்ணப்பங்களில் தாயார் பெயர் கேட்கப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள், செயற்கை முறையில் குழந்தையை பெற்றுக் கொண்ட பெண்களிடம் தந்தை பற்றிய விவரங்களைக் கேட்க முடியாது. எனவே அனைத்து அரசுத்துறை ஆவணங்களிலும் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.