காந்தி பிறந்த மண்ணில் வெட்கக்கேடான சம்பவம்… காவல் நிலையத்தில் மதுபானங்களை விற்பனை செய்த போலீசார்

காந்தி பிறந்த மண்ணில் வெட்கக்கேடான சம்பவம்… காவல் நிலையத்தில் மதுபானங்களை விற்பனை செய்த போலீசார்

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் பல இடங்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைக்கும்போது அவர்கள் அதிரடியாக ரெய்டு சென்று அவர்களை கைது செய்வதுடன், சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்வதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காந்தி பிறந்த மண்ணில் வெட்கக்கேடான சம்பவம்… காவல் நிலையத்தில் மதுபானங்களை விற்பனை செய்த போலீசார்

குஜராத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை தடுக்க வேண்டிய போலீசாரை காவல்நிலையத்தில் மதுபானங்களை விற்பனை செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் மெஹ்சனா மாவட்டத்தில் காடி அருகே சபர்மதி கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த சனிக்கிழமையன்று காலி மதுபாட்டில்கள் கிடந்த தகவல் தீயாய் பரவியது. இதனையடுத்து காந்தி நகர் காவல் கண்காணிப்பாளர் மயூர் சாவ்தா தலைமையிலான குழு இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

காந்தி பிறந்த மண்ணில் வெட்கக்கேடான சம்பவம்… காவல் நிலையத்தில் மதுபானங்களை விற்பனை செய்த போலீசார்

விசாரணையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்து. காலி மதுபாட்டில்களுக்கும் காடி காவல் நிலைய போலீசாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறை பல்வேறு ரெய்டுகளில் பறிமுதல் செய்த தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் காடி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசாரில் சிலர் அந்த மதுபாட்டில்களில் சிலவற்றை குடித்ததும், விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்த குற்ற நடவடிக்கையில், காடி காவல் நிலைய ஆய்வாளர் ஓஎம். தேசாய், 2 எஸ்.ஐ., 4 போலீஸ் கான்ஸ்டபிள், குஜராத் ரக்ஷா தள பணியாளர் ஒருவர் மற்றும் ஹோம் கார்டு ஒருவரும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து குற்றவாளிகள் மீது தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.