சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் புத்தாண்டை அணிந்து பட்டாசு வெடித்து குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா காரணமாக சில இடங்களில் தீபாவளி பண்டிகை களையிழந்துள்ளது.

சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பலர் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு!

இதனிடையே தீபாவளி நாளில் சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட காற்று மாசு குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.