முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு! – கோவை போலீஸ் அதிரடி

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு! – கோவை போலீஸ் அதிரடி

கோவையில் சமூக இடைவெளி, ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு! – கோவை போலீஸ் அதிரடி

சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த கர்நாடகாவின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை கோவை பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. சமூக இடைவெளியின்றி, சரியாக மாஸ்க் அணியாமல் கூட்டமாக பா.ஜ.க-வினர் இந்த நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு! – கோவை போலீஸ் அதிரடி

இதைத் தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், துணைத் தலைவர் கனகசபாபதி, கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க-வில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அண்ணாமலை மீது ஊரடங்கு விதியை மீறியதாக, பெருந்தொற்று கால சட்டம் இந்தியக் குற்றவியல் பிரிவு 143, 341, 285 ஆகியவற்றின் கீழ் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.