ஆற்று மணல் கடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு- 3 டிராக்டர்கள் பறிமுதல்

 

ஆற்று மணல் கடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு- 3 டிராக்டர்கள் பறிமுதல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திச்சென்ற 3 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கடலாடி பகுதியில் உதவி ஆய்வாளர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்பனூர் ஆற்றுப் படுகையில் மர்மநபர்கள் சிலர் டிராக்டர்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

ஆற்று மணல் கடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு- 3 டிராக்டர்கள் பறிமுதல்

இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், அவர்களை கண்ட மணல் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனை அடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச்சென்றனர். மேலும், மணல்கடத்தல் தொடர்பாக கடலாடி பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.