திருச்சியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 300 பேர் மீது வழக்குப்பதிவு

 

திருச்சியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி

திருச்சியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற வீர முத்தரையர் சங்கம் அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த
வீரமுத்தரையர் சங்க நிர்வாகி குருமணிகண்டன் என்பவர், குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று அவர் விடுதலையான நிலையில், அந்த அமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் குருமணிகண்டனை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

திருச்சியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 300 பேர் மீது வழக்குப்பதிவு


அப்போது, திருச்சி மத்தியசிறை முதல் கரூர் பைபாஸ் சாலை வரை, பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால், திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் வீரசிங்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில், 300-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.