திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

 

திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

மனுதர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

மனுதர்மத்தை தடை செய்யக்கோரி திருமாவளவன் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்றன. இதைத் தொடர்ந்து திருமாவளவன் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மகளிரையும், மனிதகுலத்தையும் இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்று வலுவாக தெரிவித்தார். அத்துடன் எனது 40 நிமிட உரை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டும் என்றும் பெண்களை இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பழிபோடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது மனுதர்ம நூலை எரித்தது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

இதனிடையே திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் சர்ச்சை அளிக்கும் விதத்தில் பேசியதாக கூறப்பட்டது . இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கட்சிகளின் சார்பில் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.