ஆளுநர் மாளிகை முற்றுகை: கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு!

ஆளுநர் மாளிகை  முற்றுகை: கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் 107 எம்.எல்.ஏ.களுடன் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை அம்மாநிலத்தில் கவிழ்ப்பது கடினம். இந்த சூழ்நிலையில் ஜஸ்தான் அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கோரி காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்தது.

ஆளுநர் மாளிகை  முற்றுகை: கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு!

அதன்படி நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்தியதுடன் முற்றுகையிட முனைந்தது. இதனால் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை  முற்றுகை: கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.