மாணவர்கள் கற்கும் போது ஆபாசத்தளங்கள் வரக்கூடாது: நீதிபதிகள் உத்தரவு

 

மாணவர்கள் கற்கும் போது ஆபாசத்தளங்கள் வரக்கூடாது: நீதிபதிகள் உத்தரவு

அரசு அறிவித்த ஆன்லைன் வகுப்பு விதிகளை பள்ளிகள் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல, ஆன்லைன் பாடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இருப்பினும் உடல்நல ரீதியாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்பட கூடும் என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

மாணவர்கள் கற்கும் போது ஆபாசத்தளங்கள் வரக்கூடாது: நீதிபதிகள் உத்தரவு

இவ்வாறு ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையிலும், பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. மாணவர்களின் நலன் கருதியே பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, மாணவர்களுக்காகவே அரியர் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான வழக்கு விசாரணையில், ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பு தேவை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு என்பதால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் போது ஆபாச இணையதளங்கள் வராத வண்ணம் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.