செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

 

செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிக்கப் பட்டதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை பட்டப்படிப்புக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதற்கு, சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட செம்மொழிகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த நிலையில், தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கப்பணிக்கப்பட்டதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை அவசரமாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் படி, தொல்லியல் படிப்பு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.