பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது ஓசூரிலும் வழக்குப்பதிவு!

 

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது ஓசூரிலும் வழக்குப்பதிவு!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது ஓசூரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவ.6ம் தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடைபெறும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையிலும், தடையை மீறி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார் எல். முருகன். திருத்தணியில் முருகனை வழிபட்ட பிறகு யாத்திரையில் பங்கேற்க முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைதாகினர். தமிழக அரசு தடை விதித்து, தடுத்து நிறுத்தினாலும் யாத்திரை தொடரும் என பாஜக திட்டவட்டமாக தெரிவித்தது.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது ஓசூரிலும் வழக்குப்பதிவு!

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு உத்தரவு வழங்காமல் யாத்திரை நடத்த முயன்றது ஏன்? என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். நவ.30 வரை யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தவறான செயலை நியாயப்படுத்த வேண்டாம் என்றும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது ஓசூரிலும் வழக்குப்பதிவு!

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்க முயன்ற எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.