முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?

 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?

இது தொடர்பாக அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தூத்துக்குடி எஸ்.பியிடம் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பாஜக துணை தலைவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது அவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை. இருந்தாலும், தான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலை ஓய்வு பெற்ற பிறகு ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அந்த நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் ‘ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாகவும் இதன் காரணமாக u/s 170, 416 r/w 419 of IPC 3/3 ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த வழக்கறிஞர் புகாரில் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை மீது எழுந்திருக்கும் இந்த புகார் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.