கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஉதயநிதி ஸ்டாலின் , கார்த்திக் எம்.எல்.ஏ, சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி , தென்றல் செல்வராஜ், பைந்தமிழ் பாரி ,கோட்டை அப்பாஸ் , பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் ஆகிய 9 பேர் மீது தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது,பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 சட்டப்பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.