நீட் மற்றும் ஜேஇஇக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

 

நீட் மற்றும் ஜேஇஇக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நுழைவு தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் தேர்வுக்கு முறையாக தயார் செய்யாமலும் மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. அதனால் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பில் இருந்தும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்து விட்டது.

நீட் மற்றும் ஜேஇஇக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பல எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த 1 ஆம் தேதி ஜேஇஇ தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு செப்.13 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவிருந்த நிலையில், தேர்வுக்கு முன்தினம் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் நாடு முழுவதும் குறிப்பிட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.