தடையை மீறி யாத்திரை; எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப்பதிவு

 

தடையை மீறி யாத்திரை; எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரை நடக்கும் என கூறிய எல்.முருகன் சென்னையில் இருந்து இன்று காலை திருத்தணி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடம், முருகனை தரிசிப்பது எனது உரிமை என பதில் அளித்து விட்டு சென்றார் எல்.முருகன்.

தடையை மீறி யாத்திரை; எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து திருத்தணியில் வேலுடன் சாமி தரிசனம் செய்த எல்.முருகன், அங்கிருந்து வேல் யாத்திரையில் பங்கேற்க முயன்றார். சென்னையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போதே, தடையை மீறி வேல் யாத்திரையில் கலந்து கொண்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்த பிறகு தான் திருத்தணி செல்ல அனுமதி வழங்கினர். அதனை மீறி எல்.முருகன் யாத்திரையில் பங்கேற்க முயன்றதால், அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி யாத்திரை சென்றதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பெண்கள் உட்பட பாஜகவினர் 508 பேர் மீது திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தடையை மீறி யாத்திரை தொடங்கியது, அத்துமீறியது, ஆர்ப்பாட்டம் செய்தது, அனுமதியின்றி கூட்டம் கூடியது, சாலை மறியலில் ஈடு பட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.