கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதையடுத்து சாதி, மத, இன- மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக கருப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.