darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு: மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

ஸ்டாலின்- வேலுமணி
ஸ்டாலின்- வேலுமணி

தொண்டாம்புத்தூர் : அதிமுக அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு  பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

palanisamy

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கையில் எடுத்து அதிமுக மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

stalin

அந்த வகையில் திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 'பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்பு உள்ளது. அவர் உள்ளாட்சி துறையில் பல மோசடிகளைச்  செய்துள்ளார்' என்றார். 

velumani

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர் ராமச்சந்திரன்,  ஸ்டாலின் பேசியது உண்மைக்குப் புறம்பானவை. தேர்தல் நேரத்தில் இப்படிப் பேசுவது விதிமுறை மீறல். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பரப்புரையில் பேசக்கூடாது. அதனால் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டாம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்,  தொண்டாம்புத்தூர் போலீசார்  ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்க: அமேசான் நிறுவனர் விவாகரத்து: நினைத்து கூட பார்க்க முடியாத தொகையை செட்டில்மெண்டாக கொடுத்த வினோதம்!

2018 TopTamilNews. All rights reserved.