டிடிவி தினகரன் மீது திடீர் வழக்குப்பதிவு… இதான் காரணமா?

 

டிடிவி தினகரன் மீது திடீர் வழக்குப்பதிவு… இதான் காரணமா?

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோரை இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் டிடிவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிடிவி தினகரன் மீது திடீர் வழக்குப்பதிவு… இதான் காரணமா?

சில தினங்களுக்கு முன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புர பிரச்சாரத்தில் பேசும்போது, “பழனிசாமி கம்பெனி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கிறது. இங்கு ஒருவர் தள்ளாடிக் கொண்டே (சிவி சண்முகம்) இருக்கிறார். அந்த உண்மையைச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது. இந்தத் தொகுதியில் ரூ.200 கோடியைப் பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களைத் தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்” என்று பேசியிருந்தார். தற்போது இந்தப் பேச்சின் அடிப்படையிலேயே புகாரளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.