பங்களாவில் பணம் பறிமுதல்.. ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

 

பங்களாவில் பணம் பறிமுதல்.. ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களின் வாக்குகளை கவரும் வண்ணம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பணியையும் அரசியல் கட்சிகள் சைலண்ட்டாக மேற்கொண்டு வருகின்றன. அதை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பறக்கும் படை, லட்சக் கணக்கில் பணத்தை பறிமுதல் செய்து வருகிறது.

பங்களாவில் பணம் பறிமுதல்.. ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

அந்த வகையில், ராணிப்பேட்டை தொகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மட்டும் ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் இருப்பது விசாரணையில் அம்பலமானது. அவரது பங்களாவில் இருந்து தான் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாம். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராணிப்பேட்டை போலீசாரிடம் புகாரளித்தார்.

அந்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார், அவரது மகன் கோபி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக வேட்பாளர் வீட்டிலிருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.