• April
    02
    Thursday

Main Area

Main



துப்புரவுப் பணியாளரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் மீது வழக்குப்பதிவு !

alagappa university
alagappa university

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். அந்த கல்லூரியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த பெண் ஆறுமுகம் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக அக்கல்லூரி நிர்வாக அதிகாரியிடம் கடந்த மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

tttn

அதனால், இதனைப் பற்றிக் கடந்த 9 ஆம் தேதி அழகப்பாபுரம் காவல்நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். இது குறித்துக் கடந்த சில 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேராசிரியர் ஆறுமுகம் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 
அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு !

2018 TopTamilNews. All rights reserved.