‘உரிய இ-பாஸ் பெறவில்லை’.. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

 

‘உரிய இ-பாஸ் பெறவில்லை’.. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

‘உரிய இ-பாஸ் பெறவில்லை’.. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், உரிய இ-பாஸ் இல்லாமல் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரிக்கு வந்ததாக அரியங்குப்பம் போலீசார் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.