முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவு நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்நிலையில் முன்னாள் அதிமுக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகள் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டபிரிவு 313,323,417,376,506(1),67 a IT act, 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 – அடித்து காயம் ஏற்படுத்துதல் , 417 – நம்பிக்கை மோசடி, 376 – பாலியல் வன்கொடுமை, 506 (1) – கொலை மிரட்டல், 67(a) – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.