துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் திமுக தலைமை!

 

துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் திமுக தலைமை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் சைலண்டாக பணம் விநியோகம் செய்துக் கொண்டிருக்கின்றன. கண் கொத்திப் பாம்பாக இதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் பறக்கும் படை, கையும் களவுமாக அரசியல் பிரமுகர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ளனர்.

துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் திமுக தலைமை!

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனும் பணப்பட்டுவாடா வழக்கில் சிக்கியுள்ளார். காட்பாடி தொகுதிடில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் விநியோகம் செய்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் கோபி கையும் களவுமாக சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.56 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் திமுக தலைமை!

இதையடுத்து திமுக பிரமுகர் கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். காட்பாடி தொகுதியில் திமுக பிரமுகர் பணம் பட்டுவாடா செய்துக் கொண்டிருந்ததால் அந்த தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறனும் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனியும் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆபாசமாக பேசியதாக திமுக முக்கிய பிரமுகர் கே.என்.நேரு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது துரைமுருகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது திமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.