ஊழல் புகார்; கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!

 

ஊழல் புகார்; கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!

டி.கே.சிவக்குமார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில், சில ஆண்டுகளுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. இந்த வழக்கில், இவரது மகள் ஐஸ்வர்யாவின் வங்கி கணக்கிலும் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததால் அவரிடமும் அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த வழக்கு கடந்த ஆண்டு செப். மாதம் சிபிஐ வசமும் சென்றது.

ஊழல் புகார்; கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!

டி.கே.சிவக்குமார் மீதான ஊழல் புகாரில், இன்று காலை பெங்களூருவின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அவரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு சோதனையை தொடங்கினர். அவருடன் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த திடீர் சோதனைக்கு பாஜக அரசு தான் காரணம் என்றும் பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழல் புகார்; கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை நடத்திய சோதனையில் சிவகுமாரின் வீட்டில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்குப் பதிந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.