‘கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்’ பாஜக வேட்பாளர் கலிவரதன் மீது வழக்குப்பதிவு!

 

‘கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்’  பாஜக வேட்பாளர் கலிவரதன் மீது வழக்குப்பதிவு!

திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் வி.ஏ.டி. கலிவரதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திருவண்ணாமலை- தணிகைவேல்,நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி குளச்சல் – ரமேஷ்,ராமநாதபுரம் – குப்புராம்,மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி,துறைமுகம் – வினோஜ் பி செல்வம்,ஆயிரம் விளக்கு – குஷ்பு, திருக்கோவிலூர் – கலிவரதன்,திட்டக்குடி (தனி)- பெரியசாமி கோவை தெற்கு- வானதி சீனிவாசன்,விருதுநகர் – பாண்டுரங்கன்,அரவக்குறிச்சி – அண்ணாமலை, திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்,திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், காரைக்குடி – ஹெச்.ராஜா, தாராபுரம் (தனி) – எல்.முருகன், மதுரை வடக்கு – சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

‘கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்’  பாஜக வேட்பாளர் கலிவரதன் மீது வழக்குப்பதிவு!

அத்துடன் தளி தொகுதியில் நாகேஷ்குமார்,விளவங்கோட்டில் ஜெயசீலன், உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன் உள்ளிட்டோர் களம் கண்டனர். இதற்கான முடிவு வரும் மே 2 ஆம் தேதி தெரியவரும்.

‘கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்’  பாஜக வேட்பாளர் கலிவரதன் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் கலிவரதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக ஒன்றிய செயலாளர் பிரபு மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் கலிவரதன் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் , விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளராக இருந்த காயத்ரிக்கு பாலியல் தொல்லை தந்த குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.