செந்தில் பாலாஜிக்கு மிரட்டல்.. அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு!

 

செந்தில் பாலாஜிக்கு மிரட்டல்.. அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பிரச்சாரத்தின் போது ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியை விமர்சிப்பதும், எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியை விமர்சிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால், இந்த முறை அனைத்தும் எல்லை மீறிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.

செந்தில் பாலாஜிக்கு மிரட்டல்.. அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு!

அண்மையில் திமுக எம்.பி.ஆ.ராசா, முதல்வர் பழனிசாமி கள்ள உறவில் வந்தார் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. அதற்கு அவர் மன்னிப்பும் கோரிவிட்டார். இதைத்தொடர்ந்து திமுக எம்.பி தயாநிதி மாறன், ஜெயலலிதா மம்மி மோடி டாடியா? என்று கூறியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இவர்களின் வரிசையில், தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையும் சிக்கினார். அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அண்ணாமலை, ‘தூக்கி போட்டு அடித்தால் பல் உடைந்து விடும்’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மிரட்டல் புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது