அவதூறு பேச்சு.. ஆ.ராசா, தயாநிதி மாறன் மீது பாய்ந்த வழக்கு!

 

அவதூறு பேச்சு.. ஆ.ராசா, தயாநிதி மாறன் மீது பாய்ந்த வழக்கு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடக்கும் இந்த தேர்தல் அதிமுக, திமுகவுக்கு சவாலாகவே இருக்கிறது. இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதிரடியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சாரத்தின் போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சிப்பதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சிப்பதும் வழக்கமானதே என்றாலும், இம்முறை எல்லாம் எல்லை மீறியது போலவே தோன்றியது.

அவதூறு பேச்சு.. ஆ.ராசா, தயாநிதி மாறன் மீது பாய்ந்த வழக்கு!

அண்மையில், கள்ள உறவில் அரசியலுக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என திமுக எம்.பி ஆ.ராசா கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அதே போல, பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களின் இடுப்பு பற்றி பேசியதும் திமுக எம்.பி தயாநிதி மாறன், ஜெயலலிதா மம்மி மோடி டாடியா? என்று கூறியதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இவ்வாறு அடுத்தடுத்து திமுகவின் முக்கிய புள்ளிகள் சர்ச்சையில் சிக்கினர். முதல்வர் பழனிசாமி குறித்து பேசியதற்கு ஆ.ராசா மன்னிப்பும் கோரிவிட்டார்.

அவதூறு பேச்சு.. ஆ.ராசா, தயாநிதி மாறன் மீது பாய்ந்த வழக்கு!

இந்த நிலையில் திமுக எம்பிக்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.