தமிழகத்தில் அதிகவிலைக்கு மது விற்ற 9,319 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!

 

தமிழகத்தில் அதிகவிலைக்கு மது விற்ற 9,319 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறினர். சில இடங்களில் கள்ளச்சாராயமும் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் திருடுவதும் குடிமகன்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அதுமட்டுமில்லாமல் மதுக்கடைகளை மூடியதை பயன்படுத்திக் கொண்டு பலர் மதுபானத்தை அதிக விலைக்கு விற்று வந்தனர். அதில் சில ஊழியர்களும் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து வந்தது.

தமிழகத்தில் அதிகவிலைக்கு மது விற்ற 9,319 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகவிலைக்கு மது விற்கப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், அதிகவிலைக்கு மது விற்பனை செய்த 9,319 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.