தனிமனித இடைவெளியின்றி சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.. 600 பேர் மீது வழக்குப்பதிவு

 

தனிமனித இடைவெளியின்றி சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.. 600 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்தில் இருக்கும் தாரூல் உலூம் மதரஸா முப்திகளால் அளிக்கப்படுக்கப்படும் பத்வாக்களுக்கு இஸ்லாமியர்களிடையே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன் துணை வேந்தரான முப்தி அப்துல் காசீம் நொமானி என்பவரிடம் ஊரடங்கு அமலில் இருப்பதால் ரம்ஜான் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தனிமனித இடைவெளியின்றி சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.. 600 பேர் மீது வழக்குப்பதிவு

அதற்கு அவர், வெள்ளிகிழமை சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்வது போல ரம்ஜான் பண்டிகையையும் வீட்டிலேயே தொழுகையை நடத்தலாம் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துக் கூறவேண்டி யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் கூறினார். அதன் படி அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையை வீட்டிலேயே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மகபூப்பாளையம் பகுதியின் அன்சாரி தெருவில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 9 – 10.25 மணி வரை தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் பின்பற்றாமல் தொழுகை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தொழுகையில் ஈடுபட்ட 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது, அரசின் விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.