ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு!

 

ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு!

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியாகும் போதே அர்ஜுனமூர்த்தி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் , தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, திருச்சி ரயில்வே நிலையம் எதிரே வழிவிடு முருகன் கோயில் முன்பு ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் கலீல் உள்ளிட்ட, 40 பேர் மீது கொரானா ஊரடங்கை மீறியதாக, கண்டோண்ட்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.