பாஜகவினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர் 50 பேர் மீது வழக்கு… மதுரையில் பதற்றம்?

 

பாஜகவினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர் 50 பேர் மீது வழக்கு… மதுரையில் பதற்றம்?

நாடு முழுவதும் நேற்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தலைவர்களும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பாஜகவினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர் 50 பேர் மீது வழக்கு… மதுரையில் பதற்றம்?

இச்சூழலில் மதுரை தல்லாகுளத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவிப்பதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு ஏராளமான விசிக தொண்டர்கள் கூடியிருந்தனர். அந்தச் சமயம் பார்த்து முன்னாள் பாஜக புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் அங்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க முற்படுகையில் விசிக தொண்டர்கள் தடுத்தனர்.

அப்போது ஒரு தொண்டர், “எங்க அம்பேத்கர் அய்யாவுக்கு நீ எதுக்கு மால போடுற. பிஜேபி காரனுக்கு இங்க என்ன வேலை. போ போ போய்ட்டே இரு” என்று சொல்லி விரட்டியடிக்கும் தொனியில் பேசினார். இதனால் இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் உருவானது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் பாஜவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசிகவினர் 50 பேர், பாஜகவினர் 10 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.