அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக வழக்கு!

 

அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக வழக்கு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பிஇ மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சியின்றி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக வழக்கு!

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பொறியியல் மாணவர்கள் தேர்ச்சி ஏற்க முடியாது என இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கேபி அன்பழகன் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்றும் அது சூரப்பாவின் தனிப்பட்ட கருத்து என்று சூரப்பாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக வழக்கு!

இந்நிலையில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து முன்னாள் துணைவேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.