போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

 

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சிக்கு கடந்த ஜூலை 25ஆம் தேதி வருகை தந்தை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு மோரனிமலை மற்றும் துவரங்குறிச்சி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேருந்து நிலையத்திலிருந்து பாஜகவினருடன் நடைபயணமாக வெள்ளை விநாயகர் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்து திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறப்படும் திருமண மண்டபத்தை பார்வையிட்டார்.

அப்போது ஹெச்.ராஜாவையும் பாஜகவினரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்த மருங்காபுரி வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் புறப்பட்டு சென்று விட்டனர். இந்நிலையில் துவரங்குறிச்சி போலீசார் கொரோனா காலத்தில் தேவையின்றி கொரோனா பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, என்.ஆர்.என். பாண்டியன் உள்ளிட்ட 30 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.