தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு : ஓபிஎஸ் மகன் மனு தள்ளுபடி!

தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு : ஓபிஎஸ் மகன் மனு தள்ளுபடி!

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு : ஓபிஎஸ் மகன் மனு தள்ளுபடி!

தேனி மக்களவை தேர்தலில் வாக்குக்கு எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாக மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் . இதை எதிர்த்து ஓபிஎஸ் மகன் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் ரவீந்திரநாத்திற்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு : ஓபிஎஸ் மகன் மனு தள்ளுபடி!

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் . பணம் பட்டுவாடா அதிகமாக இருந்த தேனி தொகுதியில் கிடைத்த இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.