முகமது நபியை இழிவுபடுத்தி கார்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா கைது!

 

முகமது நபியை இழிவுபடுத்தி கார்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா கைது!

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா என்று அழைத்துக்கொள்ளும் சுரேந்திர குமாரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் ஒரு பக்கச் சார்புடையவர்கள் என்று மாரிதாஸ் புகார் எழுப்பினார். தனியார் ஊடகத்திலிருந்து தனக்கு இ-மெயில் கிடைத்தது என்று பெரிய வீடியோ வெளியிட்டார். அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவரவே, சமூக ஊடகத்தில் பலரும் அவரைக் கழுவி கழுவி ஊற்றினர். இதை சமாளிக்க, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இந்து கடவுளை அவமானப்படுத்துகிறது, இதை செய்வது ஒரு இஸ்லாமியர் என்று புகார் கிளப்பினார்கள் சங் பரிவார் ஆதரவாளர்கள்.
இதைத் தொடர்ந்து கார்டூனிஸ்ட் வர்மா என்பவர், இந்துக் கடவுளை அவமானப்படுத்திய இஸ்லாமியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் இஸ்லாமை விமர்சித்து கார்ட்டூன் வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி கார்ட்டூனையும் வெளியிட்டார்.

முகமது நபியை இழிவுபடுத்தி கார்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா கைது!முகமது நபியை இழிவுபடுத்தி கார்ட்டூன் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா என்று அழைத்துக்கொள்ளும் சுரேந்திர குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா தொகுதி தலைவர் ரியாஸ் அலி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் சுரேந்திர குமாரை கைது செய்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுரேந்திர குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் இந்து அமைப்புகள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின. போலீஸ் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முகமது நபியை இழிவுபடுத்தி கார்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா கைது!விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னிலையில் சுரேந்திர குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை விமர்சித்து மிகக் கீழ்த்தரமான கார்ட்டூனை வெளியிட்டது தொடர்பாக இவர் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.