• April
    03
    Friday

Main Area

Main



20 மூட்டை குட்கா கடத்தி சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்து !

CAR
CAR

சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு 20 மூட்டை குட்காவை கடத்திக் கொண்டு இரண்டு பேர் ஸ்கார்ப்பியோ காரில் சென்றுள்ளனர். அந்த கார் பெரம்பலூர் மாவட்டம் பேரளி அருகே சென்று கொண்டிருந்த போது அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. அதனைக் கண்ட பொது மக்கள் பொது மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

ttn

கார் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் இருந்த இரண்டு பேரையும் மீட்டுள்ளனர். அதன் பிறகு காரை பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சித்த போது அதில் குட்கா மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னர், அதில் 20 மூட்டை குட்கா பொருட்களையும்  பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனைக் கடத்தி வந்த அந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குட்காவை கடத்தி சென்ற போது தான் கார் விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.