முதல் அரையாண்டில் கார் ஏற்றுமதி 58 % சரிவு

 

முதல் அரையாண்டில் கார் ஏற்றுமதி 58 % சரிவு

கடந்த ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில், கார் ஏற்றுமதி 57.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

இது தொடர்பாக வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான சங்கம் ( சியாம்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 156 என்றளவில் பயணிகள் ரக வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளது. இது முந்தையா காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 57.5 சதவீத சரிவாகும்.

முதல் அரையாண்டில் கார் ஏற்றுமதி 58 % சரிவு

இந்தியாவை பொறுத்தவரை, இங்கு தயாரிக்கப்படும் கார்கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள், தென்னாப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு பெருமளவில் கார்கள் ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில், இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அங்கு கார்களுக்கான தேவை குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு மவுசு குறைந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இந்திய கார்களின் ஏற்றுமதி 58 சதவீதம் என்ற பெரும் சரிவை கண்டுள்ளது என கார் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முதல் அரையாண்டில் கார் ஏற்றுமதி 58 % சரிவு

இதனிடையே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் கார் ஏற்றுமதி கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கார் ஏற்றுமதி 67 சதவீதம் சரிவை சந்தித்திருந்த நிலையில் 2ம் காலாண்டில் இந்த சரிவின் அளவு 42 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கார் ஏற்றுமதி, தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

  • எஸ். முத்துக்குமார்