2ஆம் உலக போர் வீரன் கேப்டன் டாம் மூர் மறைவு- 100 வயதில் ரூ.320 கோடி நிதி திரட்டிய சாதனையாளர்!

 

2ஆம் உலக போர் வீரன் கேப்டன் டாம் மூர் மறைவு- 100 வயதில் ரூ.320 கோடி நிதி திரட்டிய சாதனையாளர்!

இரண்டாம் உலகப் போர் நாயகன் கேப்டன் டாம் மூர் காலமானார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, 100 வயதான மூர் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.2) உயிரிழந்தார்.

2ஆம் உலக போர் வீரன் கேப்டன் டாம் மூர் மறைவு- 100 வயதில் ரூ.320 கோடி நிதி திரட்டிய சாதனையாளர்!

பிரிட்டிஷ் படை வீரனாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார் என்பதைக் காட்டிலும் கேப்டன் டாம் மூர் கொரோனா நிதி வசூலில் தான் உலகிற்கே அறிமுகமானார். கொரோனா லாக்டவுன் நாயகன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். கொரோனா காலக்கட்டத்தில் முன்கள வீரர்களான சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக அவர் செய்த பிரயத்தனமே உலக மக்கள் அவரை வானளவு புகழ காரணமாய் அமைந்தது. கடந்த 5 வருடங்களாகப் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்தாலும், தள்ளாத வயதிலும் ஊன்றுகோலுடன் தனது தோட்டத்தை 100 சுற்றுக்கள் வலம் வந்த வீடியோவை வெளியிட்டு நிதி திரட்டினார்.

அவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசு இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய். டாம் மூரின் இந்த அர்ப்பணிப்புக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க வெள்ளை மாளிகை என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். கொரோனா பரவலால் யாரையுமே சந்திக்காமல் இருந்த ராணி, முதல் முறையாகச் சந்தித்தது டாம் மூரை தான். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை தான் ஒரு போர் வீரன் என்பதைத் தாண்டி அவரின் உயரத்தை உலகிற்கு உணர்த்தியது. டாம் மூர் இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

திடீர் உடல்நலக் குறைவால் மூர் கடந்த ஜனவரி 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு ஏற்கனவே இருந்த புற்றுநோய், நிமோனியா உள்ளிட்ட துணை நோய்களால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2ஆம் உலக போர் வீரன் கேப்டன் டாம் மூர் மறைவு- 100 வயதில் ரூ.320 கோடி நிதி திரட்டிய சாதனையாளர்!

போரிஸ் ஜான்சன் தனது இரங்கல் குறிப்பில், “கேப்டன் டாம் மூர் ஒரு போர் வீரன் மட்டுமல்ல. அவர் இங்கிலாந்து நாட்டின் ஹூரோ. பிரிட்டிஷ்காகப் போர் செய்து விடுதலை பெற்றுத்தந்தவர். விடுதலைக்குப் பின்னும் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வெற்றிகண்டவர். அவர் கொரோனாவால் சூழ்ந்த இருளை நீக்க வந்த கலங்கரை விளக்க ஒளி.

அவர் இங்கிலாந்து மக்களுக்கு மட்டும் உத்வேகம் அளிக்கவில்லை. உலகிற்கே நம்பிக்கையின் முக்கியவத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார். அவர் இப்போது வேண்டுமானால் இறக்கலாம். ஆனால் எப்போதும் மக்களின் மனதிலும் வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்றிருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.