’இதனால்தான் தோற்றோம்’ காரணங்களை விளக்கும் கேப்டன் கோலி

 

’இதனால்தான் தோற்றோம்’ காரணங்களை விளக்கும் கேப்டன் கோலி

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் ஆட திட்டமிட்டுள்ளது.

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்டி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 374 ரன்கள் எடுத்தது. ஸ்மித், ஆரோன் பின்ச் இருவருமே சதம் அடித்தனர். மேஸ்வெல் 19 பந்துகளில் ரன்கள் விளாசினார்.

’இதனால்தான் தோற்றோம்’ காரணங்களை விளக்கும் கேப்டன் கோலி

 375 ரன்கள் எனும் வெற்றி இலக்கை வைத்து ஆடத் தொடங்கியதில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

முதல் போட்டியே தோல்வி எனும்போது இந்திய ரசிகர்கள் சோர்ந்துபோனார்கள். போட்டி முடிந்ததும் பேசிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி பேசுகையில், “நம்மிடம் ஆல்ரவுண்டர் சரியாக இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஹிர்திக் பாண்டியா இன்னும் பவுலிங் வீசும் திறனுக்கு வரவில்லை. மேலும், இந்திய வீரர்கள் 25 ஓவர்களுக்குப் பிறகு சோர்ந்து விட்டதைப்போல பவுலிங், பீல்டிங் செய்தனர். இதுவும் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க முக்கிய காரணம்’ என்று தெரிவித்தார்.

’இதனால்தான் தோற்றோம்’ காரணங்களை விளக்கும் கேப்டன் கோலி

டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் வீரர்கள் அந்த மனநிலைக்குச் சென்றுவிட்டார்கள். 20 ஓவர்கள் முடிந்ததும் மேட்ச் முடிந்தது போல சோர்வாகி விடுகிறார் என்ற குற்றச்சாட்டை கோலியே ஒத்துக்கொள்வதுபோல இருந்தது அவரது பேச்சு.

நாளை ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் இரண்டாம் ஒருநாள் போட்டி நடக்கிவிருக்கிறது. நாளையும் இந்தியா தோற்கும்பட்சத்தில் ஒருநாள் தொடரை இழந்துவிடும்.