கேப்டன் விராட் கோலி கேட்கும் சலுகை நியாயம்தானா? #IPL

 

கேப்டன் விராட் கோலி கேட்கும் சலுகை நியாயம்தானா? #IPL

ஐபிஎல் திருவிழாவில் போட்டிகள் ஆரவாரமாக த்ரிலாகச் சென்றுகொண்டிருக்கின்றன. நேற்றைய பெங்களூர் vs பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கூட கடைசி பந்தில்தான் வெற்றி யாருக்கு என முடிவு செய்யப்பட்டது.

ஐபிஎல் போட்டியில் அம்பயர் தரும் முடிவுகளை எதிர்த்து ஒவ்வொர் அணியும் ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு முறை மூன்றாம் நடுவரை அணுகும் விதமாக டி ஆர் எஸ் முறை இருக்கிறது. பல முறை அம்பயரின் முடிவுகள் இதனால் மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் வெற்றியே ஓர் அணியிடமிருந்து மற்றோர் அணிக்கு மாறியிருக்கிறது.

கேப்டன் விராட் கோலி கேட்கும் சலுகை நியாயம்தானா? #IPL

பஞ்சாப் – டெல்லி போட்டியின்போது இரண்டு ரன்கள் ஓடியிருக்க, பேட்ஸ்மேன் கிரிஸைத் தொடவில்லை என்று அம்பயர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். டிவியில் ரீ ப்ளே செய்கையில் பேட்ஸ்மேன் ரீச்சாயிகிருந்தது தெரிந்தது. அந்த ஒரு ரன் குறைவால் மேட்ச் சூப்பர் ஓவருக்குச் சென்று பஞ்சாப் அணி தோற்றது. அம்பயர் அந்தத் தவறு செய்யாதிருந்தால் பஞ்சாப் அன்றைக்கு வென்றிருக்கும்.

கேப்டன் விராட் கோலி கேட்கும் சலுகை நியாயம்தானா? #IPL

சென்னை – ஹைதராபாத் போட்டியில்கூட தாக்கூர் வீசிய பந்தை ஒயிட் என அறிவிக்க அம்பயர் தயாரானபோது தோனி கடுமையாக மறுக்க, அம்பயர் தம் முடிவை மாற்றிக்கொண்டார். அன்றைக்கு அவர் ஒயிடு கொடுத்திருந்தால் வெற்றி ஹைதராபாத் அணிக்குச் சென்றிருக்கலாம்.

இந்நிலையில் நேற்று பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, ‘ஒயிட், நோ பால் முடிவுகளுக்கு எதிராக அப்பீல் செய்ய அணி கேப்டன்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் முக்கியமானது. வெற்றியை அப்படியே மாற்றிவிடக்கூடியது’ என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கேப்டன் விராட் கோலி கேட்கும் சலுகை நியாயம்தானா? #IPL

ஏற்கெனவே உள்ள டி ஆர் எஸ் முறையில் அவுட் குறித்து மட்டுமே அப்பில் செய்ய முடியும் என்பதால் விராட் கோலி இந்த சலுகையைக் கேட்கிறார். இது அவசியம் என்றும், அம்பயரின் முடிவை கேலிக்குரியதாக்கி விடும். அம்பயருக்கான அதிகாரம் பறிக்கப்படுவதாக இருக்கும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.