கொல்கத்தா அணியில் கேப்டன் மாற்றம் – தினேஷ் கார்த்திக்குப் பதில் யார் தெரியுமா?

 

கொல்கத்தா அணியில் கேப்டன் மாற்றம் – தினேஷ் கார்த்திக்குப் பதில் யார் தெரியுமா?

ஐபிஎல் திருவிழாவில் போட்டிகள் ஆரவாரமாக த்ரிலாகச் சென்றுகொண்டிருக்கின்றன. நேற்றைய பெங்களூர் vs பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கூட கடைசி பந்தில்தான் வெற்றி யாருக்கு என முடிவு செய்யப்பட்டது.

கொல்கத்தா அணியில் கேப்டன் மாற்றம் – தினேஷ் கார்த்திக்குப் பதில் யார் தெரியுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் மாற்றப்பட்டு இயன்மோர்கன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி4 போட்டிகளில் வென்றிருக்கிறது. இதன்மூலம் பாயிண்ட் டேபிளில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால், ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல நிறைய வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் மாற்றப்பட்டிருப்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

கொல்கத்தா அணியில் கேப்டன் மாற்றம் – தினேஷ் கார்த்திக்குப் பதில் யார் தெரியுமா?

ஆனால், இந்த சீசன் தொடக்கம் முதலே கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கும் தினேஷ் கார்த்திக்கும் இடையே புகைச்சல் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. மும்பை மற்றும் டெல்லி அணியிடம் கொல்கத்தா தோற்றபோதே தினேஷ் கார்த்திக்கை மாற்ற வேண்டும் என்ற குரல் எழுந்தது. அது  இப்போது நடந்திருக்கிறது.