ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்

ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்

செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது, தேர்வை ஒத்தி வைப்பதால் பெரிய மாற்றம் வந்துவிடாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்
அதில், கொரோனாத் தொற்று மாணவர்களுக்கு வரும் என்பது மட்டுமல்ல, அவர்கள் மூலமாக அவர்கள் குடும்பத்தினர், வீட்டில் உள்ள வயதானவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, சுகாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை குறைந்தது ஒரு மாதத்துக்காவது ஒத்திப்போட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், தேர்வை ஒத்தி வைக்க முடியுமா, அல்லது தேர்வை ஆன்லைனில் நடத்த முடியுமா என்று தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்
இது தொடர்பான பதில் மனுவை தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்துள்ளது. அதில், “ஏற்கனவே தேர்வு நடத்தும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய காலதாமதம். செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தினாலே முடிவு வெளியாக குறைந்தது 15 நாள் ஆவது ஆகும். முடிவு வந்த பிறகு கவுன்சலிங் நடத்த வேண்டும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். எனவே, தேர்வை ஒத்தி வைப்பதால் பெரிய வித்தியாசம் வந்துவிடாது. அப்படி செய்தால் இன்னும் காலதாமதம் ஏற்பட்டுவிடும். மேலும் நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.