’இன்று முதல் பப்ஜி விளையாட முடியாது’ தடை அமல்

 

’இன்று முதல் பப்ஜி விளையாட முடியாது’ தடை அமல்

இந்தியா – சீனா நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது சில மாதங்களுக்கு முன். சீனா தனது படைகளை அத்துமீறி இந்திய எல்லையில் மீற வைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

ஜூலை மாதத்தில் சீனாவைச் சேர்ந்த 59 ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதில் டிக்டாக், ஸ்கேன் கேம் உள்ளிட்டவை அடங்கியிருந்தன. இதன் அடுத்த கட்டமாக, செப்டம்பர் மாதத் தொடக்கத்திலே மேலும் 118 சீனா ஆப்கள் தடை செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் பப்ஜி.

’இன்று முதல் பப்ஜி விளையாட முடியாது’ தடை அமல்

டிக்டாக் மோகம் ஒரு பக்கம் என்றால், பப்ஜி மோகம் இன்னொரு பக்கம் இருந்தது. பலர் நேரம் காலம் தெரியாமல் அந்த விளையாட்டில் மூழ்கினர். குறிப்பாக வளரிளம் குழந்தைகள் பப்ஜி கேம்க்கு அடிமையானார்கள். அதனால், அவர்களின் உடல்நல, மனநல பிரச்சனைகள் ஏற்பட்டன. எனவே ஏற்கெனவே பப்ஜியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்திலும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது முன் வைக்கப்பட்டன. ஏனெனில், பலர் இந்த பப்ஜி விளையாட்டால் தற்கொலையும் செய்துகொண்டார்கள். இதனால் சிலர் நீதிமன்றத்தில் வழக்குக்கூட தொடர்ந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தத் தடை அமைந்துவிட்டது.

’இன்று முதல் பப்ஜி விளையாட முடியாது’ தடை அமல்

ப்ளே ஸ்டோரில் பப்ஜி ஆப் தரவிறக்கம் செய்யும்விதமாகக் காட்டாது. ஆனால், ஏற்கெனவே டவுண்லோட் செய்யப்பட்டவர்கள் அதில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதைத் தடுக்க முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்சனை முழுதாகத் தீர வில்லை என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 30 முதல் டவுண்ட்லோட் செய்யப்பட்ட பப்ஜி ஆப்-ம் இயங்க முடியாத அளவுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பப்ஜி நிர்வாகத் தரப்பில் ‘இந்திய அரசின் சட்டங்களை மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.