செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

 

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் நிபுணர்கள். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு தடுப்பூசி இலவசமாக வழங்குகிறது. 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசியை மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசு உலகளாவிய டெண்டர் மூலம் 3.5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோரியுள்ளது.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

அதே சமயத்தில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பட வைப்பதன் மூலம் 1.5 கோடி தடுப்பூசிகளை தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக்கோரி வெள்ளிகோ மேரி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்றும் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது கோர்ட்டு தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு அவகாசம் தேவைப்படாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசு முடிவெடுக்கும் என்று நம்புவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.