”என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது” : நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசம்!?

”என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது” : நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசம்!?

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார்.

”என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது” : நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசம்!?

நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடந்து வரும் இந்த ஆலோசனையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

”என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது” : நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசம்!?

தனது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசி வரும் ரஜினி, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பு எப்படி இருக்கும் என்றும் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனவும் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் அறிவிக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

”என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது” : நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசம்!?

கடந்த சில மாதங்களாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த ரஜினி, தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றும் அதனை கடுமையாக சாடியுள்ளார். தொடர்ந்து ரஜினியை கட்சிக்கு வரச்சொல்லும் அவரது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தன்னுடன் அரசியல் கட்சிக்கு வந்தால் சம்பாதிக்க முடியாது எனவும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் பல முறை எச்சரித்தும் சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது.