பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம் பரபரப்பு

 

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

வறுமையில் வாடாத எவரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அதனால், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாவுழ்வு மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மகாராஷ்டிரா அரசு பிச்சை எடுப்பதற்கு தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது இதுதொடர்பான வழக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பிச்சை எடுப்பது குற்றமென்று கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல .

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேண்டுமானால் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் தனியாக சட்டம் கொண்டு வரலாம். மக்களுக்கு தேவையான உணவு பணியிடங்கள் அரசு அளிக்காத போது பிச்சை எடுப்பது எப்படி குற்றமாக அறிவிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், பிச்சை எடுப்பது ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் செயல் அல்ல. வேறு வழியே இல்லாத நிலையில் தான் பிச்சை எடுப்பதற்கு ஒருவர் தள்ளப்படுகிறார் என்பதையும் சுட்டிக் காட்டிய நீதிமன்றம், பிச்சை எடுப்பதை ஒருவரும் விரும்பி செய்வதில்லை. தேவைக்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் 2.2 லட்சம் பேர் ஆண்கள் என்றும், 1.90 லட்சம் பேர் பெண்கள் என்றும் தகவல். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை உயர்ந்து இருக்கும் என்பதும் தகவல் .

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது  -உச்சநீதிமன்றம் பரபரப்பு

இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் தான் அதிக பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி இங்கே ஒரு லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டம் அமலில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பிச்சை எடுப்பது ஒரு குற்றமாகும்.

பிச்சைக்காரர்கள் என்று போலீசார் ஒருவரை கருதினால் அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது. பிடிபடும் பிச்சைக்காரர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தொடர்ந்து பிச்சையெடுத்து பிடிபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வெளியிட்டிருக்கிறது.