3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலை கடையில் பணிபுரிய முடியாது- கூட்டுறவு துறை

 

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலை கடையில் பணிபுரிய முடியாது- கூட்டுறவு துறை

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலை கடையில் பணிபுரிய முடியாது- கூட்டுறவு துறை

திமுக அரசு வெளிப்படையாக செயல்படுவதாகவும், அதிமுக அரசு செய்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவருகிறார். அதன்படி, ஆவின் நியமன முறைகேடுக்கு தீர்வு காணப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்ற முறைகேடுகள் களையெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனொரு பகுதியா கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.