கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் – புதிய வீடியோவால் பெற்றோர் அதிர்ச்சி

 

கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் – புதிய வீடியோவால் பெற்றோர் அதிர்ச்சி

சீர்காழி அருகே சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த தைக்கால் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஏழு பேர் கூட்டாக காட்டு பகுதியில் கஞ்சாவை சிகெரட்டில் வைத்து புகைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் – புதிய வீடியோவால் பெற்றோர் அதிர்ச்சி

இந்த சம்பவம் பெற்றோர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த வாராம் 2 சிறுவர்கள் கஞ்சா வாங்குவதற்காக கோவிலில் உண்டியலை உடைத்தும், சாமியின் நகையை திருடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. இதனையடுத்து,மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்ச விற்பனையை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் – புதிய வீடியோவால் பெற்றோர் அதிர்ச்சி