வேட்பாளர்களின் குற்றப் பின்னணி : விவரங்களை விளம்பரப்படுத்த உத்தரவு!

 

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி : விவரங்களை விளம்பரப்படுத்த உத்தரவு!

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. வரும் ஏப்ரல் 6ம் தேதி புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27ம் தேதி தொடங்கும் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது. அதே போல, அசாமில் மார்ச் 27ம் தேதி தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி : விவரங்களை விளம்பரப்படுத்த உத்தரவு!

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் நடக்கவிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் பறக்கும் படைகளை களமிறக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். அதுமட்டுமில்லாமல், கண்காணிப்பு குழுவையும் நியமித்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ 3 முறை வெளியிட வேண்டும் என 5 மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுள் ஒன்று எனக் கூறப்படுகிறது.